கத்தியை வைத்து பேச அழைப்பதா? அமெரிக்காவுக்கு சீனா கேள்வி

பீஜிங்:  சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான இறக்குமதி வரியை விதித்துள்ளது. அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவும் வரி விதித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் நுசின் சீன அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது தொடர்பாக சீனா துணை வர்த்தக அமைச்சர் வாங் சோவென் கூறுகையில், ‘‘அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்கா எங்கள் கழுத்தில் கத்தி வைத்தது போன்ற மிகப்பெரிய அளவில் வரியை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், நாங்கள் எப்படி அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த முடியும்?’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: