எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வந்தது மலேசிய அரசின் அனுமதி பெற்று மணல் கொண்டு வரப்பட்டதா? தமிழக அரசிடம் தூதரக அதிகாரி விளக்கம்

சென்னை: எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வந்துள்ள மலேசிய மணல், அந்த நாட்டு அரசிடம் முறையாக அனுமதி பெற்று கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து மணல் குவாரி செயல்பாடு திட்ட இயக்குனரகத்திடம் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்தது. இந்நிலையில், மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கடந்த 23ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த மணலை கப்பலில் இருந்து இறக்கும் பணி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, இந்த மணல் விற்பனை முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் சார்பில் மலேசிய அரசாங்கத்தின் அனுமதி பெற்றுதான் இந்த மணல் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் நேற்று மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகத்திற்கு வந்தனர். அவர்கள், இந்த மணல் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா, எவ்வளவு விலை ெகாடுத்து வாங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகத்திடம், அந்நாட்டு தூதரக அதிகாரிகள் கடிதம் மூலம் விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: