பரிசு தொகை கிடைத்தது தெரியாமல் ரூ.10 லட்சம் லாட்டரி டிக்கெட்டை கசக்கி வீசிய தொழிலாளி

திருவனந்தபுரம்: ₹10 லட்சம் பரிசு விழுந்த விவரம் தெரியாமல் கூலி தொழிலாளி கசக்கி வீசிய லாட்டரி டிக்கெட்டை, அவரது நண்பர் தேடி கண்டுபிடித்து தனது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜினு (35). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகள் இதய கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பலரிடம் கடன் வாங்கிதான் மகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அஜினுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 22ம் தேதி கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதில் 2வது பரிசான ₹10 லட்சம் அஜினு வாங்கிய லாட்டரி டிக்ெகட்டிற்கு விழுந்துள்ளது. இதை அறியாத அஜினு செய்தித்தாளில் லாட்டரி குலுக்கல் பரிசு விவரத்தை ₹100, 200, 1000, 10,000 வரை பார்த்துவிட்டு, பரிசு கிடைக்கவில்லை என கருதி டிக்கெட்டை கசக்கி வீசிவிட்டார்.

இந்த நிலையில் இவரது நண்பர் அனீஷ் கிருஷ்ணனுக்கு, அஜினு வாங்கிய லாட்டரி டிக்ெகட்டிற்கு 2வது பரிசாக ₹10 லட்சம் விழுந்தது தெரியவந்தது. அவர் அஜினுவிடம் சென்று லாட்டரியில் பரிசு விழுந்ததா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பரிசு கிடைக்கவில்லை என்றும், அதனால் லாட்டரி டிக்கெட்டை வீசிவிட்டதாகவும் கூறினார்.இதையடுத்து அஜினு லாட்டரி டிக்கெட்டை வீசிய இடத்துக்கு சென்று, அதனை தேடி கண்டுபிடித்தார். பின்னர் யாரிடமும் தெரிவிக்காமல் பரிசு தொகைக்காக அந்த லாட்டரி டிக்கெட்டை தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிட்டார். இதனிடையே அஜினுவுக்கு லாட்டரி கடைக்காரர் மூலம் தான் எடுத்த லாட்டரி டிக்கெட்டிற்கு ₹10 லட்சம் பரிசு விழுந்தது தெரியவந்தது. விசாரித்ததில், அனிஷ் கிருஷ்ணன் தான் தன்னை ஏமாற்றி அந்த லாட்டரி டிக்கெட்டை அவரது பெயரில் டெபாசிட் செய்தது அஜினுவுக்கு தெரியவந்தது. தனது உயிர் நண்பனே தனக்கு துரோகம் செய்து விட்டானே என எண்ணி அஜினு மனம் உடைந்தார்.இதையடுத்து, அனிஷ் கிருஷ்ணன் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தது. இதில், பரிசு தொகையில் 50 சதவீதம் அஜினுவுக்கு தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அஜினு உடன்படவில்லை. இதையடுத்து அவர் பாலோடு போலீசில் புகார் செய்தார். இதை அறிந்து அனிஷ் கிருஷ்ணன் தலைமறைவானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: