ஒன்றரை மாதத்தில் ₹6.87 எகிறியது; தீபாவளிக்குள் ரூ.100ஐ எட்ட வாய்ப்பு சென்னையில் பெட்ரோல் ரூ.86.13க்கு விற்பனை

 புதுடெல்லி: சென்னையில் நேற்று பெட்ரோல் ₹86.13, டீசல் ₹78.36க்க விற்பனை செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் வரும் தீபாவளி பண்டிகைக்குள் பெட்ரோல் லிட்டர் ₹100ஐ எட்டும்  என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 14 காசு உயர்ந்து ₹86.13ஆகவும், டீசல் 10 காசு அதிகரித்து ₹78.36 ஆகவும் இருந்தது.  மும்பையில் பெட்ரோல் ₹90.22, டீசல் ₹78.69. டெல்லியில் பெட்ரோல் ₹82.86, டீசல் ₹74.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

 கடந்த ஒன்றரை மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் பெட்ரோல் விலை 3 நாட்கள் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையில் 6 நாட்கள்  மாற்றமில்லை. இருப்பினும் ஒரு நாள் கூட விலை குறைக்கப்படவில்லை. தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிக வரிகள் விதிக்கப்படுவதால் மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல்  விலை உச்சத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் ₹90க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. பர்பானி மாவட்டத்தில் நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் ₹91.89க்கு விற்கப்பட்டது. இதுவே நாட்டில் மிகவும் அதிகபட்ச விலையாகும். மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன்பே பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டலாம் என்று சிலர்  கருத்து தெரிவித்துள்ளனர். மும்பை தவிர நாட்டின் வேறு சில பகுதிகளிலும் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: