மோசடி ஆசாமிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்க நடவடிக்கை: ஜெட்லி வலியுறுத்தல்

புதுடெல்லி:  பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர சீராய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வளர்ச்சி வங்கிகளை வலிமைப்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். அதேநேரத்தில், கடன் பாக்கிகளை வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.  

கடன் மோசடி செய்பவர்கள், வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திவால் சட்டம், ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருளாதாரத்தை முறைப்படுத்தியதால், வங்கிகளுக்கு வராக்கடன் அபாயங்களை அளவிடுவது எளிதாகியுள்ளது. கடன் மீட்பு அதிகரிப்பால் வராக்கடன்கள் குறைந்துள்ளன என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: