அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சன் பவுண்டேஷன் ரூ.60 லட்சம் நிதி உதவி

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களு க்கு சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் வாங்க அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்கு சன் பவுண்டேஷன் ரூ.60 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு சன் பவுண்டேஷன் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளிகளைப் பராமரிக்கும் ஐ.சி.யு. வார்டுக்கு அதிநவீன வென்டிலேட்டர் சாதனங்களை வாங்குவதற்காக அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்கு சன் பவுண்டேஷன் ₹60 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவிடம் சன் பவுண்டேஷன் சார்பில் மல்லிகா முரசொலி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று வழங்கினர்.  சமூக நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் ₹53 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: