மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை கண்காணிப்பு: சேர்மன் தகவல்

சென்னை: மின்சாரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.9.17 கோடி இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆடிட் பிரிவு சார்பில் மின்வாரிய அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சேர்மன் விக்ரம் கபூர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் நிறுவனத்தின் சக பங்குதாரர்களாகிய இரு தனியார் நிறுவனங்களுக்கு கடந்த 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் உற்பத்தியை விட கூடுதலாக 135 லட்சம் யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்ததில் ரூ.9.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள் தணிக்கை பிரிவில் கடந்த 2018 பிப்ரவரியில் நடத்திய தணிக்கையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மின்வாரியத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதும் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீதும் மார்ச் 2018ல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், அந்த தொகையை மீட்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் இறங்கியுள்ளது. மின்சார வாரியத்தின் ஆடிட் பிரிவு தான் அனைத்தையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து அந்த ஆடிட் பிரிவு சார்பில் மின்சார வாரிய அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: