பணி நிரந்தரம் கோரி இரவு பகலாக சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

சென்னை: தொகுப்பூதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் நடத்தும் முற்றுகை போராட்டம் இரவு பகலாக நீடிக்கிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் 7 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்குள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்தின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை மாநில திட்ட இயக்குநர் அழைத்து பேசினார். அது தோல்வியில் முடிந்ததால் ஆசிரியர்கள் அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று பகலிலும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை கலைந்து செல்லப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளதால் போராட்டம் மேலும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: