×

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் விஷம் கலந்த மர்ம நபர்களுக்கு வலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலாமேடு பொன்னேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. சாலாமேடு மெயின் ரோட்டை சேர்ந்த தணிகாசலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த 10 ஆண்டுகளாக மீன்வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இந்த ஏரி குட்டையில் விட்டு வளர்த்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இந்த மீன்கள் திடீரென செத்து மிதந்தன. தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் யாரோ விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 4 டன் எடையுள்ள மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,dead fish, poisoned
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்