சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி: வாகன ஓட்டிகள் முற்றுகை

சேலம்: சேலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி செய்வதாக கூறி வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் 250 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது அவரது வாகனத்தில் போடப்பட்ட பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதை உரிமையாளர் பார்த்துள்ளார். மேலும், இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முறையிட்டு போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனக்  கூறியுள்ளார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த மாட்டார் வாகன ஓட்டிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அதிகரிப்பை தாங்கமுடியாத சாமானிய மக்களிடம் இதுபோன்ற பெட்ரோல் பங்க்குகள் மோசடி செய்வது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: