ஆதார் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆதார் வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவந்த நிலையில் ஆதார் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்கிற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. முன்னதாக ஆதார் மூலம் தனி நபரின் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக வாதிடப்பட்டது. மேலும் ஆதார் என்பதில் தனி நபர் விவரங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், தகவல்கள் பாதுகாப்பானதாக உள்ளது என்பது மத்திய அரசு தரப்பு வாதம் ஆகும். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: