பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு முகமையும் ஆசியப் பேரிடர் ஆயத்த மையமும் இணைந்து வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாமை நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், தீயணைப்பு மீட்பு, சுகாதாரம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: