போலி ஓவியங்களை கண்டறிய செயலி அறிமுகம்

ரிகானி: போலி ஓவியங்களை கண்டறியும் வகையில் One-Prove என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் தரமான ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலும், போலி ஓவியங்களை களையெடுக்கும் வகையிலும் செக் குடியரசின் மென்பொருள் வல்லுநர்கள் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். இதன்படி ஓவியங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு இந்த செயலி மூலம் ஆராயப்படுகிறது.

புகைப்படம் எடுக்கப்பட்ட ஓவியத்திற்கு டிஜிட்டல் பாஸ்போர்ட் அச்சிடப்படுவதுடன், புகைப்படத்தின் மேற்பரப்பில் நீலநிறத்தில் தோன்றினால் அவை பொருத்தமானதாகவும், சிகப்பு நிறத்தில் தோன்றினால் பொருத்தமற்றதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் போலி ஓவியங்களை எளிதில் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: