தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுகிறது....திருவள்ளூரில் 3 மாணவர்களுக்கு டெங்கு

திருவள்ளூர்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெரியக்குப்பத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஷர்மிலி மற்றும் ராஜசேகர், சரண் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி போன்ற இடங்களில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: