ஃபிஃபா விருது 2018: சிறந்த கால்பந்து வீரராக குரேஷியாவின் லூகா மோட்ரிச் தேர்வு

லண்டன்: 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை குரேஷிய வீரர் லூகா மோட்ரிச் பெற்றுள்ளார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜாம்பவன்களான கிறிஸ்டியானா ரொனால்டோ, முகமது சாலா, லூகா மோட்ரிச் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி லூகா மோட்ரிச் விருதை தட்டிச்சென்றார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷிய அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய பங்காற்றியவர் என்கிற அடிப்படையில் லூகா மோட்ரிச்சிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த விருதை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவே மாறிமாறி பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரொனால்டோ 5 முறையும், மெஸ்ஸி 5 முறையும் இந்த விருதை பெற்றுள்ளனர். இருவரும் இந்த விருதுவழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: