அமெரிக்காவில் வினோதம்...... காற்றின் வேகத்திற்கேற்ப அந்தரத்தில் அசைந்தாடும் 'சீசா வீடு'

நியூயார்க்: உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் காற்றில் அசைந்தாடும் வீட்டினை கட்டி சாதனை படைத்துள்ளனர்.

alignment=

நியூயார்க் நகரின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் மற்றும் ஓவியரான அலெக்ஸ் மற்றும் வார்ட் ஷெல்லி ஆகியோர் இந்த கட்டிடத்தை வடிவமைத்து உள்ளனர்.

alignment=

தரையில் இருந்து 14 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகை மின்சாரம் மற்றும் காற்றின் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

alignment=

சீசா போன்று மேலும் கீழும் அசைந்தாடிய படியே எந்த திசையையும் நோக்கும் வண்ணம் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

alignment=

மேசை நாற்காலி போன்றவை நிரந்தரமாக பொறுத்தப்பட்டிருப்பதால் வீட்டை தவிர வேறு எந்த பொருளும் அசைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: