டெக்சாஸ் சிறையில் ரூ.129 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

டெக்சாஸ்:  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றில் நன்கொடையாக வழங்கப்பட்ட வாழைப்பழ பெட்டிகளில் 129 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெக்சாஸ் நீதித்துறை சார்பில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் சிறைக்கு வழங்கப்பட்டிருந்த 45 வாழைப்பழ பெட்டிகளில் வெள்ளை நிறத்தில் 540 பாக்கெட்டுகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவற்றை சோதனை செய்ததில் அவை கொக்கைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. அவை ஒவ்வொன்றும் 1 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதனை யார் சிறைக்கு அனுப்பியது என்பது குறித்து சுங்கத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும் மெக்சிகோ-டெக்சாஸ் எல்லையில் 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: