மாயமான மலேசிய விமானம் எப்படி விபத்தில் சிக்கியது...... ஆவணப்படம் வெளியீடு

கோலாலம்பூர்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியிருக்க கூடும் என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது. இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன. இந்நிலையில் விமானியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் MH370 விமானம் எப்படி விபத்துக்குள்ளாகியிருக்கும் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் நேரடியாக கடலுக்குள் விழுந்து நொறுங்குவது போல் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: