பெண்கள் அமைப்பு வரவேற்பு: சவுதியில் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்

சவுதி: சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான  கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ‘விஷன் 2030’ என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார். இதில், பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, திரையரங்குகளை செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், அல் சவுதியா தொலைகாட்சியில், பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரங்களில் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்திகளை வாசிக்க அந்நாட்டு அரசு  அனுமதி அளித்துள்ளது. தினசரி இடம்பெறும் துணைச் செய்திகள், காலை செய்திகள், சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் வானிலை அறிக்கைகளை வழங்கும், வீம் அல் தஹீல், முதல் பெண் செய்தியாளர் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: