சில் லி பாயின் ட்...

* அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டம் அவரது 505வது  சர்வதேச போட்டியாகும் (90 டெஸ்ட், 322 ஒருநாள், 93 டி20). ராகுல் டிராவிட் (504) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் (664 போட்டி: 200 டெஸ்ட், 463 ஒருநாள், 1 டி20) முதலிடம்  வகிக்கிறார்.

* ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டதால் இலங்கை அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து ஏஞ்சலோ  மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இனி 3 வகை போட்டிகளிலும் தினேஷ் சண்டிமால் கேப்டனாக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தன்னை ஒசாமா பின்லேடன் என கேலி செய்ததாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரித்த ஆஸி. வாரியம் புதிய ஆதாரம் ஏதுமில்லை என்று கூறி  இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள வினேஷ் போகத்துக்கு பதிலாக 50 கிலோ எடை பிரிவில் ரித்து போகத் களமிறங்க உள்ளார். 53 கிலோ எடை பிரிவில் பிங்கி  போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: