கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத 19 கிளப்புகளின் உரிமம் ரத்து?

சென்னை: கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாத 19 கேளிக்கை கிளப்புகளின் உரிமங்களை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் அனுமதியுடன் பல  கேளிக்கை விடுதிகள் நடந்து வருகிறது. இந்த விடுதிகளுக்கு அதிகபட்சமாக இரவு 11 மணிவரை அனுமதி வழகப்படுகிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக விடிய விடிய பல இடங்களில் கேளிக்கை  விடுதிகள் திறந்து வைத்திருப்பதாகவும் கிளப்பில் உறுப்பினர்கள் அல்லாத நபர்கள் அதிகளவில் அனுமதித்திருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தொடர் புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்பேரில், தெற்கு  மண்டலத்திற்கு உட்பட்ட 19 கேளிக்கை கிளப்புகளில் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் நுங்கம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த திருஸ்டி க்ரவ் கிளப், கோல்டன் கிளப், ஆயிரம் விளக்கு பகுதியில் முருகேசன் நாயக்கன் காம்ப்ளக்சில் உள்ள லக்சயா மனமகிழ் மன்றம், ராயப்பேட்டையில் இயங்கி  வந்த சென்னை கல்சரல் கிளப், திருவல்லிக்ேணி பகுதியில் உள்ள சீனிவாச யூத் சென்டரில் இயங்கி வந்த பார்களில் போலீசார் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கேளிக்கை விடுதி திறந்து இருந்தது. மேலும்,  கேளிக்ைக விடுதியில், முறையாக உறுப்பினர்களாக இல்லாத நபர்கள் அதிகளவில் இருந்ததும் தெரிவயவந்தது.

இதையடுத்து, 19 கேளிக்கை விடுதியின் பார் மேலாளர்கள் 19 பேர் மற்றும் பார் ஊழியர்கள் என 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.அதைதொடர்ந்து போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ந்து இயங்கி வந்த  கிளப் மற்றும் மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய போலீசார், மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையரகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: