‘ஹலோ.. உங்கள விசாரிக்கணும், வண்டியில ஏறுங்க..’முதியவரை ஆட்டோவில் கடத்தி நகை பறித்த போலி போலீஸ்

சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்ட முதியவரிடம் உளவுத்துறை அதிகாரி என கூறி ஆட்டோவில் கடத்தி, கத்திமுனையில் ஒரு சவரன் மோதிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் எல்.பிளாக்கை சேர்ந்தவர் பரமசிவம் (70). இவர் நேற்று முன்தினம் காலை லஸ் சர்ச் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த இருவர் பரமசிவம்  பின்னால் நடந்து வந்தவரிடம், ‘‘கட்டிட வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது நீங்கள் வருகிறீர்களா’’ என்று கேட்டுள்ளார். பின்னர், பரமசிவத்தை வழிமறித்து அவர்கள், ‘‘நாங்கள் உளவு துறை அதிகாரிகள். உங்களிடம்  விசாரணை நடத்த வேண்டும்’’ என்று ஆட்டோவில் ஏறும் படி கூறியுள்ளனர்.

அதிகாரிகள் எதற்கு அழைக்கிறார்கள் என்று தெரியாமல் பரமசிவம் ஆட்டோவில் ஏறியுள்ளார். உடனே, ஆட்டோ வேகமாக தி.நகர் நோக்கி சென்றது. அப்போது, ஒரு மோதிரத்தை கையில் எடுத்த அவர்கள், ‘‘அதிலிருந்த  எண்களை காட்டி நாங்கள் திருடர்களை தேடி வருகிறோம், உங்கள் மோதிரத்தை காட்டுங்கள்  பார்ப்போம்’’ என்று பரமசிவத்திடம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பரமசிவம் ஆட்டோவில் இருந்து இறங்க முடிவு  செய்துள்ளார். உடனே அவர்கள் பரமசிவத்தின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறி தி.நகர் அபிபுல்லா சாலையில் ஆட்டோவை நிறுத்தி, பரமசிவத்தை இறக்கிவிட்டுவிட்டு  அவரிடம் இருந்த மோதிரத்தை பறித்து கொண்டு இனி யாரும் போலீஸ் என்று கூறினால் நம்பி ஏமாறாதீங்க என்று கூறிவிட்டு ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பரமசிவம் செய்வது அறியாமல் தவித்தார். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கடத்திய லஸ் சர்ச் சாலையில்  ெபாருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி போல் நடித்து முதியவரை ஆட்டோவில் கடத்தி ஒரு சவரன் மோதிரத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: