2021-22ல் ரயில்களின் வேகம் 15% அதிகரிக்கும்

புதுடெல்லி: வரும் 2021-22க்குள் ரயில்வே 100 சதவிகிதம் மின்மயமாக்கப்படும் என்றும் இதன் மூலம் ரயில்களின் வேகம் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ரயில்வேயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வேயின் அகலப்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 2021-22ம் ஆண்டிற்குள் இந்த பணி 100 சதவிகிதம் நிறைவடையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் கன்ஷியாம் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது :ரயில்வே நெட்வொர்க் தொடர்ந்து மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது ரயில்களின் வேகம் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதனால் பயண நேரம் குறையும். நாடெங்கிலும் 29 ஆயிரம் கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் கிலோ மீட்டர் வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: