வழிப்பறி திருடர்களிடமிருந்து ரூ. 80 லட்சம் காப்பாற்றியதற்கு டி ஷர்ட் பரிசு : கடுப்பான ஊழியர் ரூ.70 லட்சத்துடன் ஓட்டம்

புதுடெல்லி: டெல்லி மாடல் டவுனைச் சேர்ந்தவர் தன்சிங் பிஷ்த். தனியார் நிறுவன ஊழியர். இவர், முதலாளிக்கு விசுவாசமானவர். இதனால் கம்பெனி கலெக் ஷன் பணத்தை தன்சிங்தான் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வார். சமீபத்தில் ₹80 லட்சம் பணத்துடன் தன்சிங் வங்கிக்கு சென்றபோது, சில வழிப்பறி கொள்ளையர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அவர்களுடன் சண்டை போட்டு, சில பல காயங்களுடன் பணத்தை காப்பாற்றியுள்ளார் தன்சிங்.

உயிரை பணயம் வைத்து பணத்தை மீட்ட அவருக்கு வெறும் டிஷர்ட் கொடுத்து ‘வெல்டன்’ என முதலாளி தட்டிக் கொடுத்துள்ளார்.  ஏற்கனவே தனது 3 மகள்களை திருமணம் செய்து வைக்க முடியாமல் கடன் வாங்கி தவிக்கும் தன்சிங், காயத்திற்கு சிகிச்சை பெறவும் கடன் வாங்கி செலவழிக்க வேண்டியிருந்தது. இதனால் கடுப்பான அவர், தனது நண்பர் யாகூப்புடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, கம்பெனி பணம் ₹70 லட்சத்தை டெபாசிட் செய்ய முதலாளி கொடுத்துள்ளார். அந்த பணத்தை பைக்கில் கொண்டு சென்ற தன்சிங், நேராக யாகூப் கடைக்கு சென்றுள்ளார். இருவரும் பைக்கை அங்கு நிறுத்திவிட்டு, பணத்துடன் காரில் ஏறி நைனிடாலுக்கு கம்பி நீட்டினர். இதற்காக யாகூப்புக்கு முன்பணமாக ₹4 லட்சமும், ₹3 லட்சத்தை அவரது வங்கி கணக்கிலும் தன்சிங் டெபாசிட் செய்துள்ளார். நைனிடாலில் இருந்து திரும்பிய யாகூப், தன்சிங்கின் பைக்கை அடையாளம் தெரியாமல் பிரித்து விற்க முயன்ற போது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரிடமிருந்து ₹7 லட்சத்தை மீட்டுள்ளனர். தன்சிங்கை பிடிக்க தனிப்படை நைனிடாலுக்கு விரைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: