அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி பிரெட் கவனா மீது மீண்டும் பாலியல் புகார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிபர் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரெட் கவனா மீது மீண்டும் பாலியல் புகார் எழுப்பப்பட்டுள்ளது.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 9 நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி பிரெட் கவனாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார். இந்நிலையில், பிரெட் கவனா மீது கிறிஸ்டீன் பிளெசி போர்டு என்பவர் பாலியல் புகார் அளித்தார். இவர்கள் இருவரும் வரும் வியாழக்கிழமை அன்று செனட் நீதிக்குழு முன்பு நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது நீதிபதி பிரெட் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 1980ம் ஆண்டில் யேல் பல்கலைகழகத்தில் பிரெட் பணியாற்றியபொழுது, அங்கு அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த டிபோரா ராமிரெஸ் என்பவரிடம் முறைதவறி நடந்ததாக புகார் ெதரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் செனட் உறுப்பினர்கள் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பிரெட் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “35 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் இந்த பாலியல் குற்றச்சாட்டு உண்மையில்லை. என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது உண்மையில்லை என்பது தெரியும். வரும் வியாழக்கிழமை இதை நான் நிரூபிப்பேன். என்னுடைய புகழுக்கும் நேர்மைக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தையும் போக்குவேன்” என்று தெரிவித்துள்ளார். பிரெட் கவனாமீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்தாலும் அதிபர் டிரம்ப் அவருக்கு ஆதரவாக உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: