மும்பை தாக்குதல் சர்ச்சை கருத்து : தேச துரோக வழக்கில் ஆஜராக நவாசுக்கு பாக். நீதிமன்றம் சம்மன்

லாகூர்: மும்பை தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த புகாரின்கீழ், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேரில் ஆஜராக பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.கடந்த 2008ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த மே மாதம் ‘டான்’ பத்திரிகைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், மும்பை தாக்குதல் வழக்கை முடிக்காமல் பாகிஸ்தான் இழுத்தடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 3 முறை பிரதமராக இருந்தவரான நவாஸ், பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவர் மீது லாகூர் நீதிமன்றத்தில் அமினா மாலிக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நவாஸ், சைரில் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவாஸ், சைரில் நேரில் ஆஜராகாததால் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நவாஸ் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: