கார் விபத்தில் நடிகர்கள் தர்ஷன், தேவராஜூக்கு பலத்த காயம்

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு சாலையில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் கன்னட நடிகர்கள் தர்ஷன், தேவராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.கன்னட நடிகர்களான தர்ஷன் மற்றும் தேவராஜ், அவரது மகன் பிரஜ்வல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மைசூருவில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் அந்தோணி ஓட்டி வந்தார். அதிகாலை 3.45 மணிக்கு மைசூரு அருகில் உள்ள இன்கல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் நடிகர் தர்ஷன் வலது முழங்கையில் பலத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு நடிகர் தேவராஜிக்கு கை விரல்கள் முறிந்துள்ளது. மேலும் இதய பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. பிரஜ்வலுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை உடனடியாக மைசூரு மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தர்ஷன் முழுங்கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் சரி செய்தனர்.   நடிகர் தேவராஜ் தமிழிலில் மலைக்கோட்டை, வில்லு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: