வார்டு மறுவரையறை பணிகளில் அரசு பதில் மனுவில் முரண்பாடு உள்ளதாக நீதிபதிகள் கண்டிப்பு

சென்னை: வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள்  குறித்து அறிக்கை அளிக்க  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கடந்த 2016 நவம்பரில் நடத்த தமிழ்நாடு  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது.இதை  எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில்  விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 2017 நவம்பருக்குள்  தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தாத தேர்தல்  ஆணையத்தின் மீது ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல்  பி.வில்சன் ஆஜராகி, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தலை நடத்தாமல்  தேர்தல் ஆணையம் இழுத்தடிக்கிறது என்று வாதிட்டார்.

 வழக்கை விசாரித்த  நீதிபதிகள், இந்த வழக்கில், புதிய எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட தமிழக  ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல் துறை செயலாளர் ஆகியோரை சேர்க்க உத்தரவிட்டனர்.வழக்கு நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்  ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை  செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர்  சார்பில் பதில் மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன.இந்த பதில் மனுக்களை படித்துப் பார்த்த நீதிபதிகள்,  வார்டு மறுவரையறை செய்வதற்காக ஆணையம் அமைத்து அவசர சட்டம் பிறப்பித்த  நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள்.  எந்த அடிப்படையில் இந்த கருத்து  தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் மனுவில் திருத்தம் செய்து புதிய பதில் மனுவை வரும் அக்டோபர்  9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: