அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம்

புதுடெல்லி: அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதாக  மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அம்ருத் திட்டத்தின்கீழ் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சில நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்த 2015 ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நகரங்களின் கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கடந்த மாதம் வரையில், 24 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியல் மூலம் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்கள் மேலும் சிறப்பாக செயல்பட உந்துதல் ஏற்படும். இந்த நகரங்களின் வலிமை, பலவீனங்கள், வசதிகள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும் வழிவகை ஏற்படும்” என்று ெதரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: