பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஐஓசி அலுவலகத்தை தமாகாவினர் முற்றுகை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஐஓசி அலுவலகத்தை முற்றுகையிட்ட தமாகாவினர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமாகா இளைஞரணி சார்பில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஐஓசி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நேற்று நடந்தது.  போராட்டத்துக்கு, தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார், இளைஞரணி  தலைவர்கள் ஜெயம் ஜெ.கக்கன், கார்த்திக் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா மேம்பாலம் அருகே ஒன்று திரண்ட அவர்கள் ஐஓசி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது போலீர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது  செய்தனர். பின்னர் அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.போராட்டத்தின் போது, யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 94  சதவீதம் உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் இன்று முதல் 20 முதல் 25 சதவீத கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். எனவே உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 2011ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 141 டாலராக இருந்த போது  பெட்ரோல் ₹54க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 79.87 டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ₹85.99 ஆக உள்ளது. இது மக்களின்  பணத்தை பறிக்கும் செயலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: