கேரளா வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சென்னை-பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைச்சர்களுக்கே இடம் இல்லை: அமைச்சர் வேதனை

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ள காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, கரை பொட்டனாறு ஆகியவற்றுக்கு புதிய  கால்வாய் வழியாக கொண்டு சேர்த்து, அதன் மூலம் 98 ஏரிகளில் நீர் நிரப்பச்செய்யும் திட்டம் ₹6,500 கோடி மதிப்பிட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.  உபரிநீர் ெகாண்டு செல்லும் கால்வாய் அமையும் வழியில் தனியாரின் 2,200 ஏக்கர் பட்டா நிலங்களும், 243 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களும்  உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிலத்தை, விவசாயிகளே முன்வந்து கொடுப்பதற்காக, இன்று விவசாய சங்கங்களுடன் கலந்து  ஆலோசிக்கப்பட்டது. ஒப்புதல் பெற்றதும் விரைவில் புதிய கால்வாய் அமைப்பதற்கான முற்கட்ட பணிகள் தொடங்கப்படும். சென்னை - பழனி எக்ஸ்பிரஸ்  கேரளா வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தற்ேபாது அந்த ரயிலில் தமிழக அமைச்சர்களுக்கே இடம் கிடைப்பது இல்லை என்று அமைச்சர் சரோஜா வேதனையுடன்  கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: