ராஜிவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை விவகாரம் நாட்டின் எதிர்கால நிலையை பார்த்து கவர்னர் முடிவு எடுப்பார்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒரு தாய் என்கிற உணர்வோடு  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துள்ளார். இதில் கருத்து கூற விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் நிலையை பார்க்கவேண்டும். நாளை  நமது நாடு என்ன நிலையில் இருக்கவேண்டும் என்பதை பார்த்து கவர்னர் முடிவெடுப்பார். இதில், பாதிக்கப்பட்டவர்கள் கருத்தையும் கேட்டு அதனையும்  கருத்தில் கொள்ளப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அங்குள்ள சிலர் கூறினார்கள். அப்படி ஒரு சூழ்நிலை  ஏற்படும் என்றால் அது நல்லதல்ல. மக்களுக்கு பொருளாதார ரீதியிலான வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதேவேளை உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பாதிப்பு  இல்லாமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழகத்தில் பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. அரசியல் கூட்டணி வேறு. நாளைய தமிழகம் எப்படி உருவாக்க வேண்டும் என்ற  விருப்பம் வேறு. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: