அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கக்கோரி வழக்கு

மதுரை: தமிழக நதிகளை இணைக்கக் ேகாரிய வழக்கில் அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஓடும்  நதிகளை இணைத்து தடுப்பணைகளை கட்டினால் காவிரி உள்ளிட்ட நீருக்காக காத்திருக்க வேண்டியதில்ைல. எனவே, ஆங்காங்கே நதிகளை இணைக்கவும்,  தேவைப்படும் இடங்களில் அணைகளை கட்டவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் திட்டம் உருவாக்குதல் பிரிவு தலைமைப் பொறியாளர் செல்வராஜூ தாக்கல் செய்த பதில் மனு: ஓவேலி ஆறு கேரளாவிற்குள் பாண்டியாறு, புன்னம்புலா ஆறாக ஓடுகிறது.

 இதை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர் பங்கீடு என்பது இரு மாநில  பிரச்னை சம்பந்தப்பட்டது. அனைத்து நீர் பாசன திட்டங்கள், உபரிநீர், தேவை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு புதிய பாசன திட்டங்கள் உருவாக்கும் வகையில்  அந்தந்த பகுதிகளில் தலைமைப் பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப விபரங்கள், கடந்தகால மழையளவு, நீர்பிடிப்பு  பகுதிகள், அறிவியல் பூர்வ நடவடிக்கைகள், நிலம், வனத்துறை அனுமதி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நதிகள் இணைப்பு குறித்து அரசுத்தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 8க்கு தள்ளிைவத்து  அன்றைய தினம் இறுதி வாதம் நடக்கும் என கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: