பெண்ணுறுப்பை சிதைக்கும் சடங்கை எதிர்த்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: தாவூதி போஹ்ரா இஸ்லாமியரின்  பெண் உறுப்பை சிதைக்கும் சடங்கு முறையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாவூதி போஹ்ரா முஸ்லீம் பிரிவில், 5 வயது முதல் பெண்கள் பருவம் அடைவதற்கு முன்பாக பெண்ணுறுப்பின் ஒரு  பகுதியை துண்டிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. பெண்ணுறுப்பை சிதைக்கும் கொடூரமான இந்த நடைமுறையை மதச் சடங்காக அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. முன்னதாக இந்த வழக்கில் ஆஜரான தாவூதி போஹ்ரா முஸ்லீம் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள், பெண்ணுறுப்பை சிதைக்கும் சடங்கு தாவூதி போஹ்ரா உள்ளிட்ட சில முஸ்லீம் பிரிவில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து அரசியல் சாசன அமர்வு மூலம் ஆராயப்படவேண்டும் என்று தெரிவித்தனர் இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: