கர்நாடக மேலவை தேர்தலில் திடீர் திருப்பம் : எம்எல்ஏ.க்களை வளைக்க முடியாததால் போட்டியில் இருந்து விலகியது பாஜ

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் காலியாகவுள்ள 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜ போட்டியிடாதால் காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பரமேஸ்வர் (கொரட்டிகெரே), கே.எஸ்.ஈஸ்வரப்பா (ஷிவமொக்கா நகரம்), வீ.சோமண்ணா (கோவிந்தராஜ்நகர்) தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து மூன்று பேரும் ஏற்கனவே தாங்கள் வகித்து வந்த மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருக்கும் இந்த இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைதொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று காங்கிரஸ் சார்பில் எம்.சி.வேணுகோபால் மற்றும் நசீர் அகமது ஆகியோர்  கட்சி நிர்வாகிகளுடன், சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதேபோல் மஜத சார்பில் ரமேஷ்கவுடா மனுதாக்கல் செய்தார்.இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான பாஜ சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேரவையில் போதிய உறுப்பினர் பலமில்லாததால் கடைசி நிமிடத்தில் வேட்பாளர் நிறுத்தும் முடிவை கைவிட்டது. ஆப்ரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏ.க்களை வளைக்க பேரம் நடப்பதாகவும், இதற்காக தலா ₹5 கோடி கொடுக்க பாஜ முயன்று வருவதாகவும் இரு கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், இந்த முயற்சி வெற்றியடையாததால், பாஜ போட்டியில் இருந்து விலகிவிட்டது. இதனால் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: