ரபேல் பேரத்தில் ஊழல் வழக்கு பதியும்பமத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் காங். புகார்

புதுடெல்லி: ரபேல் பேரத்தில் ஊழல் வழக்கு பதியும்படி மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.ரபேல் விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலண்டே அளித்த பேட்டிக்குபின் இந்த பிரச்னை கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். நேற்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் கே.வி.சவுத்ரியிடம் புகார் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில்சிபல், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிசேக் சிங்வி, மணீஷ் திவாரி, விவேக் தன்கா, பிரமோத் திவாரி, பிரணவ் ஷா ஆகியோர் அடங்கிய குழுவினர் மத்திய ஊழல் தடுப்பு ஆணையரை சந்தித்து நேரடியாக மனு அளித்தனர்.

அதில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்தை தவிர்த்து சில தொழில் அதிபர்கள் பயன்பெறும் வகையில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பணம் வீணாவதுடன், தேசப்பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஊழல் வழக்குப்பதிய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: