குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த 1996ம் ஆண்டு எஸ்.பி.யாக பணியாற்றிவர் சஞ்சீவ் பட். இவரது தலைமையிலான போலீசார் சுமர்சிங் ரான்புரோகித் என்ற வக்கீலை ஒரு கிலோ போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்தனர்.ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில், இது பொய் வழக்கு என்றும், ராஜஸ்தானில் உள்ள ஒரு சொத்தை மிரட்டி எழுதி வாங்குவதற்காக, சுமர்சிங்கை ராஜஸ்தானில் உள்ள வீட்டிலிருந்து குஜராத் போலீசார் கடத்திச் சென்று கைது செய்தனர் என்றும் ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து சிஐடி போலீஸ் விசாரணைக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் எஸ்.பி மீது குற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு சஞ்சீவ் பட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது மனைவி ஸ்வேதா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், ‘‘என் கணவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வதற்கு கையெழுத்திட அனுமதிக்கப்படவில்லை’’ என்றார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஷா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதுகுறித்து குஜராத் அரசு முதலில் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெறும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: