கோவாவில் உடல்நிலை சரியில்லாத 2 அமைச்சர்களின் பதவி பறிப்பு

பனாஜி: கோவா மாநிலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாறாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் இல்லாத நிலையில், நிர்வாக பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. மேலும், ஆட்சி அமைப் பதற்கு தங்களிடம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால், ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் உரிமை கோரியது.  இதனிடையே நேற்று முன்தினம் பாஜ தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மனோகர் பாரிக்கரே முதல்வராக நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக பாஜ தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார். மேலும் ஒரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதன்படி, உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் டிசோசா மற்றும் மின்சார துறை அமைச்சர் மட்கைகர் ஆகியோரின் பதவி பறிபோயுள்ளது. மட்கைகர் கடந்த ஜூனில் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேபோல் டிசோசா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய முதல்வர் மனோகர் பாரிக்கர் பரிந்துரை செய்துள்ளார். இவர்களுக்கு பதிலாக மிலிந்த் நாயக் மற்றும் நிலேஷ் கார்பல் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: