முட்டை விலை 5 காசு அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின்  பண்ணை கொள்முதல் விலை 335 காசாக நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.நாமக்கல்  மண்டலத்தில், கடந்த இருவாரமாக தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு  வருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர்  செல்வராஜ், நேற்று முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 5 காசுகளை உயர்த்தி  அறிவித்தார். இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 335 காசாக  நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை  விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 338, மைசூர் - 340, பெங்களூரு - 350,   கொல்கத்தா - 421, டெல்லி - 385, மும்பை - 385, விஜயவாடா - 376 காசுகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: