போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிகளில் ரூ.5.10 கோடி மோசடி : 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவற்றில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன், ₹5.10 கோடி ஊழல் செய்த 4 பேரை கைது செய்த மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்  அவர்களிடமிருந்து ₹97.34 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கர்நாடக ஊரக கட்டுமான வளர்ச்சி கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் கணக்கில் ₹5கோடியே 10லட்சம் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கண்ட வங்கிகளில் சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அப்துல் சலாம், சீஜோ கே. ஜோஸ், சுனில் மோன், ஜெர்ரி பால் ஆகியோர் சாம் ட்ரேடிங், அபிஷேக் எண்டர்பிரைசஸ், தன்கா டிரேடிங் பிரைவேட் லிமிடெட், ஏஞ்சல் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக கூறி வங்கி பணத்திலிருந்து  ₹5கோடியே 10லட்சம்மேற்கண்ட நிறுவனங்கள் பெயரில் செலுத்தி பின்னர் மும்பையில் உள்ள 4 பேர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்திவந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மங்களூரு, சூரத்கல் போலீசார் அப்துல் சலாம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹97,39,340ஐ பறிமுதல் செய்தனர். இதில் வங்கி அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: