அதிமுக எம்பி பற்றி அவதூறு பேச்சு எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: திட்டக்குடியில் 200 ஏக்கர் கோயில் நிலத்தை அபகரித்ததாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மீது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கொடுத்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.கடந்த 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா “திட்டக்குடி குளத்தை ஆக்கிரமிச்சது யாரு? சிட்டிங் எம்.பி. அருண்மொழிதேவன், ஒரு எம்பியாக இருக்கிற ஆள் அதுவும் சிட்டிங் எம்.பி. கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரித்து இருக்கான். எங்கிட்ட எல்லா டாக்குமெண்டும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி” என்று பேசியுள்ளார்.இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எச்.ராஜா மீது கடலூர் அதிமுக நாடாளுமன்ற  உறுப்பினர் அருண்மொழி தேவன் புகார் அளித்தார்.அதன்படி, உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது எச்.ராஜா பேசிய வீடியோ பதிவு பெற்று ஆய்வு ெசய்தனர். அப்போது கடலூர் எம்பி அருண்மொழி தேவன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தெரியவந்தது. இதையடுத்து ேநற்று எச்.ராஜா மீது ஐபிசி 153, 153A(1)(a)(b),505(1)(b)(c) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: