நவரத்தின கற்கள் மீதான இறக்குமதி வரி உயர்கிறது

புதுடெல்லி: நவரத்தின கற்கள், சில வகை ஸ்டீல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் இறக்குமதி அதிகரிப்பு போன்றவை நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு வழி வகுக்கின்றன. கடந்த ஜூலை மாதத்தில் தங்கம் இறக்குமதி 41 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 93 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் இதை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் அதிகரிக்கும் என்பதால் வரியை அதிகரிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

 அதேநேரத்தில், நவரத்தின கற்கள், சில வகை ஸ்டீல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை மத்திய  அரசு உயர்த்த இருக்கிறது. இது குறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப்போர் காரணமாக இரு நாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து வருகின்றன. அமெரிக்கா 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது வரி விதித்ததற்கு பழிக்கு பழியாக, அமெரிக்காவின் 6,000 கோடி டாலர் மதிப்பிலான 5,207 பொருட்கள் மீது 5 முதல் 10 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. எனவே, இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரிக்கும் என்பதால் வரி விதிக்கப்படுகிறது. இதன்படி நவரத்தின கற்கள், சில வகை ஸ்டீல், எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. தங்கம் இறக்குமதிைய தடுக்க தங்க டெபாசிட் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட இருக்கின்றன என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: