மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் பறிமுதல் செய்யும் வாகனங்களுக்கு அபராதம் கட்டினாலும் அதை விடுவிக்கக்கூடாது என்று ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  மேலும் மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: