குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அக். 10ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

உடன்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்.10.ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் அக்.9ம்தேதி பகல் 11மணிக்கு காளிபூஜை, மாலை 5மணி சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடக்கிறது அக்10ம்தேதி காலை 5மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவும், காலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டும் வைபவம் நடக்கிறது. இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. 2ம்நாளான 11ம்தேதி இரவு 9மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்திலம் அம்மன் திருவீதியுலாநடக்கிறது. 3ம்நாளான 12ம்தேதி இரவு 9மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது. 4ம்நாளில் இரவு 9மணிக்கு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 5ம் நாளில் இரவு 9மணிக்கு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 6ம்நாளில் இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.

7ம்நாளில் இரவு 9மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 8ம்நாளில் இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், 9ம்நாளில் இரவு 9மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும், நடக்கிறது.10ம்நாளான 19ம்தேதி காலை 10.30மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும், இரவு 12மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பேரசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.

11ம்திருநாளில் அதிகாலை 1மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனை நடக்கிறது. காலை 6மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும்,மாலை 4மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 4.30மணிக்கு காப்புகளைதல், நள்ளிரவு 12மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 21ம்தேதி மதியம் 12மணிக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரோஜாலி சுமதா, இணைஆணையர் பரஞ்ஜோதி, செயல்அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தசரா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

ஜாதி சின்னம், சமுதாய தலைவர்கள் படம் பதித்த பனியன்கள், கொடிகள் பதாகைகள் கொண்டு வரக் கூடாது. உலோகத்தினால் ஆன வேல், ஈட்டி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் கொண்டு வரக்கூடாது. குலசேகரன்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயில் நுழையும் இடம் முதல் திருக்கோயில் பின்புறம் வரை டிரம் செட்போன்ற அதிக ஒலி தரும் மேளதாளங்களை அடிப்பதால் ஒரே இடத்தில் தசரா குழுக்கள் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதால் பின்னால் வரக்கூடிய தசரா குழுக்கள், பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாலும், திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அவசர காலத்தில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை பக்தர்களிடம் சேர்க்க இயலாத நிலை நிலவுவதாலும் மேளதாளங்களை தவிர்த்து விட்டு அம்பாளுக்கு உகந்த ‘’ஓம்காளி, ஜெய்காளி’’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி திருக்கோயில் வளாகத்தில் செல்ல வேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: