மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் லாக்கரில் பலஆயிரம் கோடி சொத்து ஆவணம் சிக்கியது

கடலூர்: போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் லாக்கரில் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கடலூர் தவ்லத் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது. அதில், அவரது வீட்டிலிருந்து ரூ.35 லட்சம் பணம், 200 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடலூரில் உள்ள தனியார் வங்கியில் அவரின் லாக்கரில் சோதனையிட்டதில், அதில் 8.250 கிலோ தங்கமும், அதுபோல் கடலூர் வங்கி லாக்கரில் சோதனையிட்டதில் 3.750 கிலோ தங்க நகைகளும் சிக்கியது. ஏற்கனவே பாபுவின் 3 வங்கி லாக்கரில் இருந்து 11 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் பாபு வீட்டில் இருந்து ரூ.31 லட்சம் ரொக்கம், 200 சவரன் நகையும் பரிமுதலானது.

இதனை அடுத்து இன்று பாபுவுக்கு சொந்தமான 4-வது வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆய்வாளர் பாபுபின் வாங்கி லாக்கரில் இருந்து அரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் லாக்கரில் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: