பேட்டரியில் இயங்கும் சொகுசு கார்... ஆடி நிறுவனம் அறிமுகம்

ஜெர்மனி: ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடி முற்றிலும் பேட்டரியில் இயங்கக்கூடிய  காரை அறிமுகம் செய்துள்ளது. ஆடி, ஜக்வார், டெஸ்லாமோட்டார், உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்க்ககூடிய காரை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் நடந்த ஆடி நிறுவன கண்காட்சியில் e-tron என்ற பேட்டரியில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் இந்த காரை சந்தை விற்பனைக்கு கொண்டு வர ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் e-tron காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.5.50 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் எக்ஸ் மாடல் காருக்கு போட்டியாக இந்த e-tron காரை ஆடி நிறுவனம் களமிறக்கியுள்ளது. அழகிய உட்புறவடிவமைப்பு, கவர்ந்திழுக்கும் வகையிலான வெளிப்புற வடிவமைப்பு, உயர் ஆற்றல் கொண்ட எஞ்சின் கொண்ட தரத்துடன் e-tron உருவாக்கப்பட்டுள்ளது.

ஆற்றல் மிகுந்த எஞ்சின் பொறுத்தப்பட்டிருப்பதால் 6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை e-tron எட்டும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் கார் என்றாலும் பெட்ரோலால் இயங்குவது போல அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் இந்த காரை இயக்க முடியும், ஒரு முறை சார்ச் செய்தால் சுமார் 400 கிமீ வரை பயணம் செய்ய முடியும் அரை மணி நேரத்தில் 80% அளவு சார்ச் ஏற்றிக்கொள்ளும் வகையிகள் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது.  e-tron காரை விற்பனை செய்வதர்களாக ஆடி நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: