2019-ம் ஆண்டு இறுதியில் நொடிக்கு 100 ஜிபி டவுன்லோட் செய்யலாம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பெங்களூர்: 2018 ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையின்படி, இணையதள பயன்பாட்டில் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் இந்தியா. ஆனால் இணையதள வேகத்தில் உலகிலேயே 109 வது இடத்தில் உள்ளது. நாட்டின் பிராட்பேண்ட் வேகம் ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது, ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகம் குறைவாகவே உள்ளது.

ஆனால் தற்போது இந்தியாவில் 1 நொடிக்கு 100 ஜிபி டவுன்லோட் செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி வரும் 2019-ம் ஆண்டு இறுதியில் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் பேசிய அவர் கடந்த ஜூன் மாதத்தில் ஜிசாட்-19 செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதிவேக இணைய வசதிக்காக அடுத்தடுத்து மூன்று செயற்கை கோள்கள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் ஜிசாட்-29 செயற்கை கோளும், பிரெஞ்சு, கயானாவில் இருந்து டிசம்பர் மாதத்தில் ஜிசாட்-11 செயற்கை கோளும், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஜிசாட்-20 செயற்கைக்கோளும் ஏவப்பட இருப்பதாக சிவன் கூறினார்.

இந்த செயற்கை கோள்கள் அனைத்தும் விண்ணில் ஏவப்பட்ட பிறகு அதிவேக இணையதள வசதி இந்தியாவிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பவர்களால் நொடிக்கு 100 ஜிபி டவுன்லோட் செய்யும் வகையிலான இணையதள வேகத்தை இந்தியாவில் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: