பணிச்சுமை காரணமான சேலத்தில் வேளாண்துறை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் : சேலம் மாவட்டம் பாரப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற வேளாண்துறை அலுவலர் தற்கொலை செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வேளாண்துறை அலுவலராக இவர் பணியாற்றி வருகிறார். மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த பணியாளர் சான்றிதழையும் சிவக்குமார் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரை விழுப்புரத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஆனால் மன உளைச்சல் காரணமாக இவர் பணியில் சேராமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் துணை வேளாண்துறை அலுவலராக

பணியமர்த்தப்பட்டார். கடந்த 15 நாட்களாக வெண்ணந்தூரில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் அங்கு 6 பேர் இருக்க வேண்டிய நிலையில் இரண்டு பேர் மட்டுமே இருந்துள்ளனர். சிவக்குமாருடன் மற்றொரு அதிகாரி மட்டுமே பணியாற்றியுள்ளார். மீதமுள்ள 4 பணியாளர் இடங்கள் காலியாக இருந்துள்ளது.

இதையடுத்து கடந்த 6 மாதங்களாக தேங்கிக்கிடந்த அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என சிவக்குமாருக்கு பணிச்சுமை கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 15 நாட்களாகவே மன உளைச்சால் சிவக்குமார் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மனைவி இந்திரா மற்றும் மகன் விஜய் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு முன்னாள் இருந்த மரத்தில் தூக்கிட்டு சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சிவக்குமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பணிச்சுமை மற்றும் பணியிட மாற்றம் காரணமாகவே சிவக்குமார் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளளனர். மேலும் இதுகுறித்து மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வெண்ணந்தூரில் சிவக்குமார் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: