ஆஸ்திரியாவில் நடைபெற்ற யூசிஐ உலக சைக்கிள் பந்தயம்: குயிக் ஸ்டெப் பிளோர்ஸ் அணி சாம்பியன்

ஆஸ்திரியா: யூசிஐ ரோட் உலக சாம்பியன்ஷிப், யூனியன் சைக்லிஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் சைக்கிள் சாலை பந்தயத்திற்கான வருடாந்திர உலக சாம்பியன்ஷிப் போட்டி ஆகும். இந்த வருடத்திற்கான போட்டிகள் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. ஆஸ்திரியாவில் நடைபெற்ற யூசிஐ உலக சைக்கிள் பந்தயத்தில் குயிக் ஸ்டெப் பிளோர்ஸ் (Quick-Step Floors) அணி முதலிடம் பிடித்தது. 63 கிலோ மீட்டர் தூரம் என்ற இலக்கை இந்த அணி 1 மணிநேரம் 7 நிமிடம் 26 நொடிகளில் கடந்து அசத்தியது.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த சன் வெப் (sunweb) என்ற அணி 18 வினாடிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை இழந்தது. பிஎம்சி ரேஸிங் டீம் (BMC Racing Team) மூன்றாவது இடத்தை பிடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: