ரங்கநாதர் கோயிலில் தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பிய நகைகள் மாயம் : ஆர்.டி.ஐ. தகவலில் அதிர்ச்சி

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தொல்லியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நகைகள் மாயமாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோயில் பாதாள அறையில் இருந்த விலை மதிப்பு மிக்க பொக்கிஷங்கள் மாயமாகி இருப்பதாக கூறியிருக்கும் பக்தர்கள், கேரள ஜோதிடர்களை கொண்டு இரவில் பிரசன்னம் பார்த்து கோயில் மதில்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு புகார் கூறியிருக்கின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது தொல்லியல்துறையினரின் ஒப்புதலை பெற்றும், அந்த அதிகாரிகள் கலந்து ஆலோசித்து தான் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது என கோயில் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். அதேபோல் கோயிலில் கிடைக்கப்பட்ட பொக்கிஷங்களும் தொல்லியல் துறையினர் ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் அவர்கள் தெடர்ந்து வெளியிட்டு வந்தார்கள்.

ஆனால் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது தான் தெரியவந்தது, தொல்லியல் துறையினர் எந்த ஆலோசனையும் செய்யவில்லை, அதிகாரிகளையும் கோயிலுக்கு அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஒய்வு பெற்ற அதிகாரியை வைத்து மட்டுமே இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது என தாவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மாந்திரீகமானது கோயிலுக்குள்ளே பார்க்கப்பட்டது போன்று புதுப்புது தகவல்கள் ஆர்.டி.ஐ. வெளியிட்டுள்ளது. ஆகவே விரிவான விசாரணை நடைபெற்றால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் என்ன நடத்தந்து என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: